
ஐயா வணக்கம் 🙏
நான் தருண். ஈரோடு எனது சொந்த ஊர், இப்பொழுது ஜெர்மனியில் இருக்கிறேன்.
ஓஷோ-வின் Vigyan Bhairav Tantra மூலமாக என்னை நான் அறிந்தேன். மெய் ஞானம் அடைந்தேன். மெய் ஞானம் அடைந்த பின்பு என்ன செய்வது என்று ஓஷோ, Lao Tzu, Alan Watts, Ouspensky, UG Krishnamurthy கூறவில்லை. அப்பொழுது தான் Socrates Studio டாக்டர் முரளி தங்களின் ஔவையின் ஞானக்குறள் புத்தகத்தை பற்றி ஒரு காணொளி செய்தார். மெய் சிலிர்த்தேன். தங்களின் “உயிர் மலரும் தமிழ் வேதம் – திருவாசகம்” என்னை வழி நடத்தி சரியான பாதையில் கொண்டு செல்கிறது. மிக்க மிக்க நன்றி ஐயா. தங்களின் உரைநடை திருவாசகத்தை திருமந்திரம், வள்ளலார், திருக்குறள் என்று அனைத்து தமிழ் மெய் ஞான நூல்களின் மூலம் நீங்கள் தருகிற விளக்கம் மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு Contemporary தமிழ் மாணவர்களிடையே சென்று சேரும் 🙏 மிக்க மிக்க நன்றி ஐயா 🙏
நான் நேற்றைய முன்தினம் நிலவை நோக்கி மெய் ஞான நிலையில் அமர்ந்து, காயகல்பம் செய்து கொண்டே இடகலை, பிங்கலையில் intuitive-ஆக பாற்கடலை வலது நாசி, இடது நாசியில் மூச்சை மாறி மாறி கடைந்தேன். பிறகு அந்த இரவே தொண்டை இனிப்பாக இருந்தது. நேற்று முழுவதும் என் தொண்டை இனிப்பாகவே இருந்தது. Camera-வில் Zoom செய்து புகை படம் எடுத்தால், அண்ணாக்கின் மேல் இருந்து வெள்ளை பால் சுரந்து, தொண்டையில் வழிகிறது. அதை நான் விழுங்க விழுங்க சுரந்து கொண்டே இருக்கின்றது. பசியே இல்லை. வாய் முழுவதும் பால் சுவை மற்றும் பால் வாசம்.
நான் இன்னும் எதையும் சாப்பிடவில்லை.
எனக்கு தங்களின் வழிகாட்டுதல் மிக மிக உதவியாக இத்தருணத்தில் இருக்கும் ஐயா 🙏
தங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றேன் 🙏✨❤🌊
இப்படிக்கு,
தங்களின் மாணவன்,
தருண்


