அஷ்டாவக்கிர கீதை உயிரின் விழிப்புணர்வு

அன்று குரு பூர்ணிமா.  பொதிகை மலை. இரவு நிலவின் வெளிச்சத்தில் எங்கள் சற்குருவோடு எம்மோடு சேர்த்து 7 சீடர்களும் பொதுமக்கள் ஒரு 90 பேர் இருப்பார்கள் அனைவரும் அகத்தியர் தவம் செய்த பாறைக்கு அருகில் இருந்த மருத மரத்தின் அடியில் அமர்ந்திருந்தோம்.  எங்கள் குருவை இந்த குரு பூர்ணிமா நாளன்று மலர்களாலும் வாசனைத் திரவியங்களாலும் அலங்கரிப்போம். அன்றும் அவ்வாறே நடந்த நிகழ்வு இது.  குருமேனிமீது வாசனைத் திரவியங்களைப் பூச குரு என்னைத் தவிர வேறு எவரையும் அனுமதிப்பதில்லை.  அப்புண்ணியம் எமக்குக் கிடைத்திட்ட பெரும் பாக்கியமாகும்.

மற்ற சீடர்கள் மலர்களால் குருவை அலங்கரித்தார்கள்.  அலங்காரங்கள் முடிந்ததும் குரு முன்பு அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.  குரு எம்மை மகா ருத்ர ஹோமத்தைச் செய்திடும்படி பணிக்க, ஏற்கனவே சீடர்கள் அனைவரும் அதற்கான பூஜை பொருட்களோடும், ஹோமப் பொருட்களோடும் தயாராக இருந்தோம்.  சுமார் 2 மணி நேரம் மகா ருத்ர ஹோமத்தை குருவின் கருணையினால் சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது.  ஹோமம் ஆரம்பித்த நேரத்தில் சற்குரு அவர்கள் மகா சமாதியில் மூழ்கிப் போனார்கள்.

இதை நானும் ஞானாம்பாளும் கண்டுபிடித்து உணர்வால் உணர்ந்து குருவின் அருட்கலைகளைக் கிரகித்தபடியே ஹோமத்தை செய்து மகா ருத்ர பகவானுக்கு ஆகுதி கொடுக்கும் நேரம் வந்தபோது, சற்குரு அவர்கள் சட்டென்று பூமியைவிட்டு 6 அடி உயரத்திற்கு மேலெழும்பி நின்று நிலவின் ஒளியைவிட அதிகளவில் பிரகாசித்தார்கள்.  இது ஒரு 10 நிமிடங்கள் நீடித்திருக்கும். அப்போது ஹோமத்திலிருந்து மகா ருத்ர பகவான் அக்னிப் பிழம்போடு நெருப்பு சுவாலையாக ஹோமக் குண்டத்திலிருந்து மேலேழும்ப ஆரம்பித்தார்கள்.

குருவின் அருள்: தெய்வீக வெளிப்பாட்டின் ஒரு இரவு

நாங்கள் கொடுத்த அவிர்பாகத்தை முழுமையாகப் பெற்றுக் கொண்டு எங்கள் சற்குருவை அவரின் திருவடி மலர்ந்து பார்க்க மகா ருத்ர பகவானின் அக்கினிச் சுவாலைகள் குருவின் மேனியை வட்டமிட்டு சுழல ஆரம்பித்தன. இக்காட்சியைக் கண்ட அத்தனை பேரும் கீழே கண்ட மகா ருத்ர மந்திரத்தைச் சொல்லச்சொல்ல உடன் சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த மந்திரம் இதோ :

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதாசிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமோ நமஹ

இந்த மந்திரத்தை நாங்கள் அனைவரும் மகா உணர்ச்சியோடும், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட, குரல்களில் அத்தனை இன்பங்கள் பொங்கிப் பிரவாகம் எடுக்க சொல்லச் சொல்ல மகா ருத்ர பகவான் நிரம்பவே அகம் மகிழ்ந்து எங்கள் அனைவரையும் அவரின் அக்கினி சுவாலையாக இருந்த திருவடிகளால் கண் பணித்து சிரம் தூக்கி ஆசிர்வதித்தார்கள்.  அப்போது நாங்கள் அனைவரும் அடைந்த பேரின்ப உணர்வுகளுக்கு எல்லையே இல்லை.

இது ஒரு 5 நிமிட நேரம் நிகழ்ந்திருக்கும்.  எங்கள் அனைவரையும் ஆசிர்வதித்த ருத்ர பகவான் விண்நோக்கி ஒளியாகச் சென்று மறைந்தார்கள்.  எங்கள் சற்குருவுக்கோ மகா சமாதி மென்மேலும் கூடிக் கொண்டே போய் சில மணி நேரம் கடந்து கண் மலர்ந்தார்கள்.  அப்போது நேரம் இரவு 12.30 மணியிருக்கும்.  சற்குரு நாங்கள் செய்த மகா ருத்ர ஹோமத்தை மகா அற்புதம் என்று அவரின் பொன்வாயால் பாராட்டி மகிழ்ந்தார்கள்.  நாங்கள் இதுவெல்லாம் உங்கள் கருணையும் ஆசிர்வாதமும்தான் குருவே என்று அவரின் திருவடிகளில் சரண் புகுந்தோம்.

நான் மெல்ல மெல்ல குருவின் பாதங்களை வருடிவிட்டு, “சற்குருவே, இன்று குரு பூர்ணிமா தினம். எங்கள் அனைவருக்கும் அற்புதமான வாழ்வில் மறக்க முடியாத ஒரு பிரமஞானத்தை வழங்கிட வேண்டுகிறோம்.  தயைகூர்ந்து அருள்பாலியுங்கள் குருவே” என்று நான் சொல்ல மற்ற அனைவரும் இதை ஆமோதித்து அவரின் திருவடிகளில் பணிந்து படுத்துக் கொண்டோம்.  குருவோ சற்று புன்முறுவல் பூத்து, எங்களை எல்லாம் எழுந்து அமரும்படி சொல்லி, அனைவருக்கும் பிரபஞ்சத்திலிருந்து உணவுகளை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடுக்கக் கொடுக்க, இந்தக் காட்சியைப் பார்க்க கோடிக் கண்கள் வேண்டும்.  அப்படியே மூச்சடைத்து இந்த உணவு வழங்கும் நிகழ்வு சென்றது.  அடுத்தபடியாக சற்குரு திருவாய் மலர ஆரம்பித்தார்கள்.

நீ நினைப்பது போல் நீ இல்லை.

அன்பு சீடர்களுக்கும் அன்பர்களுக்கும் குருவருள், திருவருள் பூரணமாகக் கிடைக்கட்டும். ஆசிர்வதிக்கின்றோம். நாம் அனைவருமே நம் வாழ்க்கை முழுவதும் ஏராளமான தவறான நம்பிக்கை களையும் யோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், அவைகளோ நம்மை எல்லாம் அடிமைத்தனத்தில்தான் வைத்திருக்கின்றன. இந்த உலகில் தற்போது நிலவிவரும் பற்றாக்குறைகளுக்கும் துன்பங்களுக்கும் அவைகள்தான் காரணமாக அமைந்துள்ளன. இதில் பணம், நேரம், வளங்கள், அன்பு, ஆரோக்கியம், செல்வம் ஆகிய அனைத்தும் அடங்கும்.

நாமெல்லாம் எப்படி பயிற்றுவிக்கப்பட்டு வளர்ந்துள்ளோம் தெரியுமா? “வாழ்க்கை குறுகியது”, “நீ ஒரு சாதாரணமான மனிதன்தான்”,“வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும், போராட வேண்டும்”, “செல்வ வளங்கள் வேகமாகக் காலியாகிக் கொண்டிருக்கின்றன, அதனால் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக சம்பாதித்துக் கொள்ள வேண்டும்”, “இந்த உலகம் கொந்தளிப்பான வன்முறை, தீவிரவாதத்தால்தான் இருந்து வருகிறது”, “இந்த உலகத்தை நாம்தான் காப்பாற்ற வேண்டும்” இவையெல்லாம் அதற்கான உதாரணங்கள்.

நீங்கள் அனைவரும் ஒரு பேருண்மையை உணர்ந்து கொண்ட உடனேயே இந்த நம்பிக்கை இன்மைகள் உடைந்து நொறுங்கிப் போய்விடுவதைக் காண்பீர்கள். அந்த இடிபாடுகளில் இருந்து உங்களுடைய மகிழ்ச்சியானது தானாகவே முளைத்தெழுந்து வளர்ந்து மரமாகும்.

நீங்கள் எப்போதாவது மனமுடைந்து போயிருக்கிறீர்களா? மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? தீவிரமாகக் கவலைப்பட்டிருக் கிறீர்களா? பிறரால் புண்படுத்தப்பட்டிருக்கிறீர்களா? மோசமான மனநிலையில் இருந்திருக்கிறீர்களா? இப்படிப்பட்ட உணர்ச்சிகளை நீங்கள் உங்கள் வாழ்வில் எப்போதாவது அனுபவவித்திருந்தீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கையானது ஒரு கடுமையான சிக்கலில்தான் இருந்து வருகிறது என்பதை ஒப்புக்கொண்டு விடுங்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? ஒவ்வொரு நாளும் நீங்கள் எதிர்மறைச் சிந்தனைகளால்தான் ஆட்கொள்ளப்பட்டு வந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், உங்கள் வாழ்க்கை அப்படியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை பயம், கவலை, மனக்காயம், மனமுடைதல் ஆகியவை எதுவுமே இல்லாமல் தொடர்ந்து மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் வாழ முடியும்.

நாம் அனுபவிக்கின்ற சவாலான சூழல்களால் உண்டாகின்ற துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியை வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. ஆனால், அவ்வழியை நாம்தான் பார்ப்பதே இல்லையே. நாம் நம்முடைய பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறோமே. அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுதலை பெறுவதற்கான வழியானது நமக்கு முன்னால்தான் இருந்து வருகிறது. நாம்தான் அதைப்பார்க்கவோ, சிந்திக்கவோ தவறவிட்டு விடுகிறோம்.

நன்றாக ஒரு விசயத்தை உள்வாங்கிக் கொண்டுவிடுங்கள். நம்மைக் குறித்து நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற ஒன்று உண்மையற்றதாக இருப்பதால்தான் நாம் துன்புறுகிறோம். நம்முடைய சொந்த அடையாளம் குறித்த நம்முடைய கண்ணோட்டம் தவறாகவே உள்ளது. மனித குலத்தின் அனைத்துத் துன்பங்களும் இந்த ஒன்றிலிருந்துதான் பிறக்கின்றன.

தனக்கு நடக்கின்ற, தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்கின்ற விஷயங்கள் குறித்து எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கொண்டிருக்காத ஒரு நபர் அல்ல நீங்கள்.

தனக்குப் பிடிக்காத ஒரு வேலையில் மாடாய் உழைத்து அதனாலேயே சீக்கிரம் உயிரை விடுகின்ற ஒரு நபர் அல்ல நீங்கள்.

மாதச் சம்பளத்தை எதிர்நோக்கிக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு நபர் அல்ல நீங்கள்.

தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவசியமுள்ள அல்லது பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்ற தேவையுள்ள ஒரு நபர் அல்ல நீங்கள்.

இன்னும் சொல்லப் போனால், உண்மையில் நீங்கள் ஒரு நபரே அல்ல.

நீங்கள் ஒரு நபராக இருக்கின்ற அனுபவத்தைக் கண்டிப்பாக நீங்கள் பெற்றிருப்பீர்கள். ஆனால், ஆழமாகப் பார்த்தால், அந்த அனுபவங்களும் நீங்கள் அல்ல.

விசயங்கள் வெளிப்பார்வைக்குத் தெரிவதுபோல இருப்பதில்லை. நீங்கள் யார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதுவல்ல நீங்கள்.

சில நேரங்களில் வாழ்க்கையில் அறிகுறிகளை மட்டுமே நாம் குறி வைக்கிறோம். அடிப்படைக் காரணங்களை நாம் தவறவிட்டுவிடுகிறோம். நம்முடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொள்வதும், அதை அங்கீகரிப்பதும்தான் அது. எல்லாவற்றுக்குமான மருந்து இதுதான்.

மகிழ்ச்சியே உங்கள் உண்மையான இயல்பு.

நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கின்ற மகிழ்ச்சியின்மை, அதிருப்தி மற்றும் துன்பங்கள் அனைத்தும், உண்மையில் நாம் யார் என்பது குறித்த அறியாமை அல்லது தெளிவின்மை காரணமாக விளைபவைகள்தான்.  அதனால் இந்த மகிழ்ச்சி இல்லாமை, துன்பங்கள் ஆகியவற்றின் எல்லா வடிவங்களிலிருந்து நாம் விடுபட விரும்பினால், உண்மையில் நாம் யார்? என்பது குறித்த நம்முடைய அறியாமை மற்றும் தெளிவின்மையிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பது குறித்த மதிப்பீடு உங்களுடைய மகிழ்ச்சியின் அளவைத் தீர்மானிக்கும்.  நீங்கள் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? நீங்கள் எல்லா நேரங்களிலும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? மகிழ்ச்சி நிரந்தரமாக உங்களைத் தொற்றிக் கொண்டுள்ளதா? நீங்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருந்தாக வேண்டும்.  மகிழ்ச்சிதான் நீங்கள்.  அதுதான் உங்களுடைய உண்மையான இயல்பு.  அதுதான் உண்மையான நீங்கள்.

நீங்கள் அனைவருமே இந்த உலகத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரேயொரு விசயம் என்ன தெரியுமா? இந்த மகிழ்ச்சியைத்தான்.  நீங்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும் இந்த மகிழ்ச்சியை மட்டும்தான் விரும்புகின்றன.  இது காலத்தின் அடிப்படை வேதாந்தம்.

ஒரு விசயத்தை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டாக வேண்டும்.  பௌதிகப் பொருட்களின் மூலமாக நீடித்த மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.  ஒவ்வொரு பௌதிகப் பொருட்களுமே இறுதியில் மறைந்துதானே போகிறது.  அதனால் நீங்கள் பௌதிகப் பொருட்களோடு உங்களை இணைத்துக் கொண்டால், அதனால் உங்கள் மகிழ்ச்சியும் இறுதியில் மறைந்துதான் போகும்.  பௌதிகப் பொருட்களை விரும்புவதில் தவறு எதுவும் இல்லைதான்.  ஆனால், பௌதிகப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கான நீடித்த மகிழ்ச்சியை தருபவைகள் கிடையாது என்பதை நாம் அனைவருமே புரிந்து கொண்டாக வேண்டும்.

அதனால் நீங்கள் அனைவரும் நிரந்தரமான மகிழ்ச்சியைப் பெறுவதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது.  உண்மையில் நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் அது.  காரணம் என்ன தெரியுமா, மகிழ்ச்சிதான் உங்களின் உண்மையான சுயம் – இருத்தல் – இயல்பாகும்.